நாமக்கல் ஆர்டிஓ அலுவலகத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனை கூட்டம்

நாமக்கல், ஏப்.13: நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் கோட்டாட்சியர் கோட்டைகுமார் தலைமையில் நேற்று நடைபெற்றது.கூட்டத்தில் அவர் பேசுகையில், ‘வணிக நிறுவனங்கள் கடைபிடிக்க வேண்டிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பற்றியும், வணிகர்களும், நிறுவனங்களில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட ஊழியர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கினார்.கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகத்திற்கு வணிகர்கள்  முழு ஒத்துழைப்பையும் தருவதாக நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் உறுதியளித்தார். ஆலோசனை கூட்டத்தில் அனைத்து வணிகர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories:

>