கூட்டுறவு சங்கத்தில் ₹1 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், ஏப்.13: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹1 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பல்வேறு ஊர்களைச் சேர்ந்த விவசாயிகள் மொத்தம் 4800 பருத்தி மூட்டை கொண்டு வந்திருந்தனர். பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள். விவசாயிகள் முன்னிலையில் ஏலத்தை நடத்தினர்.

குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் பருத்தி ₹2200 முதல் அதிகபட்சம் ஒரு குவிண்டால் ₹7002 வரை ஏலம் போனது. மொத்தம் ₹1 கோடிக்கு பருத்தி ஏலம் போனது.

Related Stories:

>