கேஆர்பி அணையிலிருந்து பாசனத்திற்கு மேலும் 10 நாள் தண்ணீர் திறக்க வேண்டும்

கிருஷ்ணகிரி, ஏப்.13: கேஆர்பி அணையிலிருந்து பாசனத்துக்காக மேலும் 10 நாட்கள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமையில் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி அடுத்த கேஆர்பி அணையில் இருந்து, 90 நாட்களுக்கு இடது மற்றும் வலது புற கால்வாய்களில் தண்ணீர் திறக்கப்பட்டது. இன்று (நேற்று)டன் 90 நாட்கள் நிறைவடைகிறது. இதனால் தண்ணீர் நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டாம் போக நெல் சாகுபடி முழுமையாக முடிய இன்னும் 12 நாட்கள் தண்ணீர் தேவைப்படுகிறது. அப்போதுதான் முழுமையான நெற்கதிர்களை அறுவடை செய்ய முடியும். ஆகவே, இன்னும் 10 நாட்கள் தடையின்றி பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: