×

ஜூஜூவாடியில் 2வது நாளாக வாகன தணிக்கை தீவிரம்

ஓசூர், ஏப்.13: ஓசூர் அருகே ஜூஜூவாடியில், 2வது நாளாக வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை தொடர்ந்து, அனைத்து மாநில எல்லைகளில் சுகாதாரத்துறையினர் மற்றும் வருவாய் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு, தமிழகத்திலிருந்து பொதுபோக்குவரத்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் இந்த 3 மாநிலங்களுக்கும் இபாஸ் நடைமுறை தேவையில்லை என அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த 3 மாநிலங்களை தவிர்த்து மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்குள் வரும் அனைத்து வாகனங்களுக்கும் இபாஸ் கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழககர்நாடக எல்லையான ஓசூர் அருகேயுள்ள ஜூஜூவாடியில் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 2வது நாளாக அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, இபாஸ் இல்லாமல் தமிழகத்திற்குள் வந்த வாகனங்களை சோதனை செய்து திருப்பி அனுப்பினர். மேலும் மாஸ்க் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு தலா ₹200 அபராதம் விதிக்கப்பட்டது.

Tags : Jujuwadi ,
× RELATED ஒசூரில் வெளிமாநில பதிவு எண்கள் கொண்ட 4 ஆம்னி பேருந்துகள் பறிமுதல்..!!