காரைக்கால் பெண் தாதா எழிலரசிக்கு நிபந்தனை ஜாமீன்

காரைக்கால்,  ஏப். 13:  தேர்தலுக்கு முன் சிறையில் அடைக்கப்பட்ட காரைக்கால்  பெண் தாதா எழிலரசி நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.  காரைக்கால்,  நிரவி டிஆர் பட்டினத்தைச் சேர்ந்தவர் எழிலரசி (38). பெண் தாதாவான இவர் மீது  கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் நடந்து முடிந்த  சட்டமன்ற பொதுத்தேர்தலில் நிரவி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு மக்கள்  சேவை பணிகளை அங்கு மேற்கொண்டு வந்தார்.இதனிடையே அப்பகுதியில் முன்னாள்  சபாநாயகரின் உறவினர்களை மிரட்டிய வழக்கில் அவரை போலீசார் தேடிய நிலையில்,  வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த எழிலரசியை போலீசார் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.  தேர்தல் முடிந்த நிலையில் அவர் இவ்வழக்கில் ஜாமீன்  கேட்டு தனது வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தை நாடிய நிலையில், தற்போது  அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து புதுச்சேரி  காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த பெண் தாதா எழிலரசி அங்கிருந்து  ஜாமீனில் வெளியே வந்தார். ஏற்கனவே எழிலரசி அவரது ஊரில் நுழைய 144 தடை (2 மாதம்)  உத்தரவு அமலில் உள்ளதால் நீதிமன்ற உத்தரவுக்கிணங்க காரைக்காலில் உள்ள மற்ற  காவல் நிலையத்தில் அவர் ஆஜராகி கையெழுத்திடுவார் என்று தெரிகிறது.

Related Stories:

More
>