செஞ்சி மார்க்கெட் கமிட்டியை விவசாயிகள் திடீர் முற்றுகை

செஞ்சி, ஏப். 13: செஞ்சி மார்க்கெட் கமிட்டியில், மீதமுள்ள நெல் மூட்டைகளை ஏலத்துக்கு எடுத்து கொள்ளாததால் கமிட்டி நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் முற்றுகை போராட்டம் நடத்தினர். செஞ்சி, மேல்மலையனூர் தாலுகாவில் தற்போது குறுவை சாகுபடி முடிந்து அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த நெல் மூட்டைகளை விவசாயிகள் செஞ்சி மார்க்கெட் கமிட்டிக்கு விற்பனைக்காக எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தன. இதில் 500 லாட் மட்டுமே ஏலத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மீதமுள்ள 150 லாட் எடுக்கவில்லை. மீதமுள்ள மூட்டைகளையும் ஏலத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கூறி மார்க்கெட் கமிட்டியை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவலறிந்த செஞ்சி டிஎஸ்பி இளங்கோவன் மற்றும் கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள மூட்டைகளையும் ஏலத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவித்ததால் விவசாயிகள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories:

>