×

கொரோனா தடுக்க ஆலோசனை கூட்டம் போளூர் தாலுகா அலுவலகத்தில்

போளூர், ஏப்.12: போளூர் தாலுகா அலுவலகத்தில் கொரோனா தடுப்பது குறித்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. போளூர் தாசில்தார் மு.சாப்ஜான் தலைமை தாங்கினார். டிஎஸ்பி எம்.அறிவழகன் முன்னிலை வகித்தார். வருவாய் ஆய்வாளர் சு.பிரேன்நாத் வரவேற்றார். கூட்டத்தில் 2வது அலை கொரோனா வேகமாக பொதுமக்களிடம் பரவி வருவதை தடுப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், போளூர் நகரில் முகக்கவசம் அணியாதவர்களிடம் கட்டாயம் அபராதம் வசூலிக்க வேண்டும். கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். உட்பட பலவேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து போளூர் பேருராட்சி அலுவலகத்தில் கொரோன வைரஸ் தடுப்பது குறித்து வியாபாரிகளுடன் ஆலோசனை கூட்டம் பேருராட்சி அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்திற்கு வியாபார சங்க தலைவர் கோ.சண்முகம் தலைமை தாங்கினார். துப்புறவு மேற்பார்வையாளர் சே.ரவிக்குமார் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனை வழங்கினார். கூட்டத்தில் வியாபார நிறுவனங்களின் உரிமையாளர்கள் பணிபுரியும் ஊழியர்கள் கடைக்கு வரும்போது முகக்கவசம் அணிய வேண்டும். கடைக்கு வாடிக்கையாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும். வணிக நிறுவனத்தில் நுழையும் அனைவரும் கிருமிநாசினி கண்டிப்பாக பயன்படுத்தி கையை சுத்தப்படுத்த வேண்டும். மேலும், சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், கடை மற்றும் வணிக வளாகங்களில் முகக்கவசம், கிருமிநாசினி, சமூக இடைவெளி கடைபிடிக்காவிட்டால், அதிகாரிகள் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வார்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.

Tags : Polur taluka ,
× RELATED திருவண்ணாமலை மற்றும் ஆரணி...