உடுமலை. தாராபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

தாராபுரம், ஏப்.12:  அரக்கோணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து தாராபுரம் அண்ணா சிலை அருகே மாவட்ட செயலாளர் தமிழ் முத்து தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட துணைச் செயலாளர் ஆற்றலரசு முன்னிலை வகித்தார். இதில், அரக்கோணம் சட்ட மன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில்  ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சூர்யா, அர்ஜூன் ஆகியோரை படுகொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்ய வேண்டும்.

பலியான இருவர் குடும்பத்திற்கும் தலா ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அரசு வேலையும் வழங்க வேண்டும். உயிருக்கு போராடி வரும் மற்ற மூவருக்கும் தலா 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மார்க்சிஸ்ட் கம்யூ., கனகராஜ், திராவிட கழக மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட பொறுப்பாளர்கள் ரங்கநாதன், கான் முகமது, ஒன்றிய நகர  பொறுப்பாளர்கள் கரிகாலன், ராஜசேகர், மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உடுமலை: திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சதீஷ்குமார் தலைமையில் உடுமலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பொன்.ஈஸ்வரன் முன்னிலை வகித்தார். துப்புரவு பணியாளர்கள் மேம்பாட்டு மையத்தின் மாநில துணைச் செயலாளர் விடுதலைமணி, மடத்துக்குளம் ஒன்றிய செயலாளர் சிட்டிபாபு, தமுமுக கமால்தீன், ஐக்கிய கம்யூனிஸ்ட் மூர்த்தி, திராவிடர் தமிழர் கட்சி தங்கவேல், தமிழர் பண்பாட்டு பேரவை பால் நாராயணன், கிறிஸ்தவ சமூக நீதிப்பேரவை மாவட்ட அமைப்பாளர் இமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>