வடமாநில பெண் தீக்குளித்து தற்கொலை

திருப்பூர், ஏப்.12:   மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சுந்தரி ஹீக்கர்(40). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தேவராயம்பாளையத்தில் தங்கி அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது கணவர் மேற்கு வங்கத்தில் வசித்து வருகிறார். இவர் மட்டும் இங்கு தனியாக வசித்து வந்தார் .இந்நிலையில் 8ம் தேதி வீட்டில் தனியாக இருந்த சுந்தரி ஹீக்கர் திடீரென உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீயை பற்ற வைத்தார். இதனால் உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் வலியால் அலறி துடித்தார்.அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி சுந்தரி ஹீக்கர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories:

>