கொரோனா பரவல் காரணமாக சொந்தஊர் புறப்பட்ட வடமாநில தொழிலாளர்கள்

திருப்பூர்,ஏப்.12: கொரோனா வைரஸ் மீண்டும் பரவி வருவதால் முழு ஊரடங்கு அச்சம் காரணமாக திருப்பூரிலிருக்கும் வெளி மாநிலத்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயில் மூலம் புறப்பட்டு சென்றனர். கொரோனா வைரஸ்க்கு பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் பலியாகி உள்ளார்கள். இந்நிலையில் கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரசை கட்டுபடுத்த அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் தீவிரத்தை எட்டியிருந்த நிலையில் அரசு சார்பில் முழு ஊரடங்கு அறிவித்திருந்தனர்.

அப்போது திருப்பூருக்கு வேலைக்காக வந்த வடமாநிலத்தவர்கள் சிலர் சொந்த மாநிலங்களுக்கு செல்ல முடியாமல் திருப்பூரிலே சிக்கி கொண்டனர். இதனால் மீண்டும் தற்போது கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. கொரோனா அதிகரிக்கும் சூழலில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு வந்து விடும் என்ற அச்சம் காரணமாக திருப்பூரில் பணிபுரிந்து வந்த வடமாநிலத்தவர்கள் பலர் நேற்று ரயில் மூலம் சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு சென்றனர். இதனால் நேற்று திருப்பூர் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

Related Stories:

>