×

விருதுநகர் மார்க்கெட் நிலவரம் கடலை எண்ணெய் விலை உயர்வு பாமாயில் விலையும் எகிறியது

விருதுநகர், ஏப்.12:  பாமாயில் டின்னுக்கு ரூ.80, கடலை எண்ணெய் டின்னுக்கு ரூ.80 விலை உயர்ந்துள்ளது. விருதுநகர் மார்க்கெட்டில் பாமாயில் கடந்த ஒராண்டாக விலை உயர்ந்த நிலையில், கடந்த வாரம் குறைந்து, நடப்பு வாரத்தில் மீண்டும் டின்னுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. (அடைப்பிற்குள் கடந்த வார விலை) பாமாயில் ரூ.2,020(1,940) நிலக்கடலைப்பருப்பு (80 கி) ரூ.8,000 (7,750), நிலக்கடலை விலை சரிவால் கடலை எண்ணெய் டின் ரூ.2,880 (2,800), கடலை புண்ணாக்கு 100 கிலோ ரூ.4,400 (4,000). விருதுநகர் மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம்: உளுந்து (100 கிலோ) லயன் - ரூ.8,000, பர்மா உளுந்து பருவட்டு(புதுசு) - ரூ.8,000, பர்மா பொடி - ரூ.7,800, உருட்டு உளுந்தம்பருப்பு லயன் - ரூ.10,500, உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா பருவட்டு - ரூ.10,500, உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா பொடி - ரூ.10,200, தொளி உளுந்தம்பருப்பு - ரூ.9,300. உக்ரைன் துவரை (100 கிலோ) - ரூ.6,000, தான்சானியா துவரை - ரூ.6,800, லயன் துவரை - ரூ.7,200, துவரம்பருப்பு இறக்குமதி - ரூ.8,700, துவரம்பருப்பு - ரூ.9,700, உடைப்பு துவரம்பருப்பு - ரூ.9,200.

கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா பாசிப்பயறு (புதுசு) - ரூ.9,200, இறக்குமதி பயறு - ரூ.8,900, ஆந்திரா பயறு - ரூ.8,700, பாசிப்பருப்பு லயன் - ரூ.10,900, பாசிப்பருப்பு ஆந்திரா - ரூ.11,100, இறக்குமதி பாசிப்பருப்பு - ரூ.11,400. கடலைப் பருப்பு 100 கிலோ மூட்டை - ரூ.8,000, பொரிகடலை 55 கிலோ மூட்டை - ரூ.4,400. பட்டாணி பருப்பு 100 கிலோ - ரூ.6,400. பட்டாணி வெள்ளை - ரூ.6,400, மசூர் பருப்பு உருட்டு - ரூ.7,500. நல்லெண்ணைய் டின் - ரூ.3,713 எள் புண்ணாக்கு (50 கி) - ரூ.2,000, நாடு மல்லி (40 கிலோ) - ரூ.5,000, லயன் மல்லி - ரூ.3,300.

முண்டு வத்தல் புதுசு குவிண்டால் - ரூ.22,000 முதல் ரூ.28,000, முண்டு வத்தல் பழசு - ரூ.18,500 முதல் ரூ.21,500, லோக்கல் சம்பா வத்தல் வத்தல் - ரூ.12,500 முதல் ரூ.14,350, குண்டூர் வத்தல் - ரூ.13,000 முதல் ரூ.14,000. மளிகை பொருட்கள் மொத்த விலை கிலோவில்: மஞ்சள் தூள் - ரூ.140, வெந்தயம் - ரூ.90, கடுகு - ரூ.80, சீரகம் - ரூ.220, சோம்பு - ரூ.140, மிளகு - ரூ.420, புளி கிலோ நயம் - ரூ.200, புளி சாதா - ரூ.100, கசகசா - ரூ.1,200, கருப்பு எள் - ரூ.200, வெள்ளை பூண்டு - ரூ.160, மண்டை வெல்லம் - ரூ.50, சுண்டல் (கருப்பு) - ரூ.58, வெள்ளை - ரூ.75, தட்டாம் பயறு - ரூ.60, கருப்பட்டி ரூ.240 என விற்பனையானது.

Tags : Virudhunagar ,
× RELATED விருதுநகரில் பாதாள சாக்கடை அடைப்பால்...