×

திருச்சியில் நடந்த பொதுக்குழுவில் முடிவு 2வது நாளாக கிளப் கட்டிடம் இடிக்கும் பணி வேலை நீக்கம் செய்ததை கண்டித்து

திருச்சி, ஏப்.12: திருச்சியில் கூலி உயர்வு கேட்ட லாரி புக்கிங் ஆபீஸ் சுமைப்பணி தொழிலாளர்களை சட்டவிரோதமாக வேலை நீக்கம் செய்ததை கண்டித்து இன்று குடும்பத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். லாரி புக்கிங் ஆபீஸ் சுமைப்பணி தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருச்சியில் உள்ள சிஐடியூ லாரி புக்கிங் ஆபீஸ் சுமைப்பணி தொழிலாளர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பேச்சுவார்த்தை நடத்தி கூலி உயர்வு வழங்கப்படும். கடந்த வருடத்திற்கான கூலி உயர்வு பேச்சுவார்த்தை 3 முறை நடத்தியும் சுமூக தீர்வு எட்டப்படாததால் கூலி உயர்வு வழங்கப்படவில்லை.

இந்நிலையில் பழைய பால்பண்ணை அருகில் புதிய லாரி புக்கிங் அலுவலகம் திறக்கப்பட்டு புதிய ஆட்களை வைத்து லோடுகள் ஏற்றப்பட்டன. இந்நிலையில் கூலி உயர்வு வழங்காமலும், பழைய ஆட்களுக்கு பதிலாக புதிய ஆட்களை வைத்து வேலை செய்ய முயற்சித்தபோது தொழிலாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கூலி உயர்வு கேட்டு போராடிய சுமைப்பணி தொழிற்சங்க நிர்வாகிகள் உள்பட 5 சுமைப்பணி தொழிலாளர்களை சட்ட விரோதமாக வேலை நீக்கம் செய்ததை கண்டித்தும், தொழிலாளர் ஆணையர் உத்தரவுப்படி 55 கிலோ சுமை தூக்குவதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஓவர்லோடு ஏற்றுவதை தடை செய்ய வேண்டும். கூலி உயர்வு பேச்சுவார்த்தை விரைந்து நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ லாரி புக்கிங் ஆபீஸ் சுமைப்பணி தொழிலாளர்கள் குடும்பத்தோடு இன்று (12ம் தேதி) காலை 10 மணி அளவில் ராமகிருஷ்ணா பாலம் அருகில் குடும்பத்தோடு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Trichy ,
× RELATED திருச்சியில் போலி மது பாட்டில்கள் பறிமுதல்..!!