×

நன்னிலம், குடவாசல் பகுதிகளில் கோடை நெல் விவசாய பணிகள் துவக்கம்

திருவாரூர், ஏப்.12: திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல் பகுதிகளில் கோடைநெல் சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் மற்றும் குடவாசல் பகுதிகளில் சுமார் 3 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் கோடை நெல் விவசாய பணி களை துவக்கி உள்ளனர். ஆழ்துளை கிணறுகள் மூலம் விவசாயத்திற்கு தண்ணீர் பெறுவதற்கு வசதியாக மும்முனை மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக விவசாயத்திற்கு தட்டுப்பாடின்றி தண்ணீர் பெற முடியும் என்ற நம்பிக்கையில் குடவாசல் மற்றும் நன்னிலம் பகுதிகளில் உள்ள விவசாயிகள், திருந்திய முறையில் எந்திரங்கள் மூலம் நெல் சாகுபடி பணிகளை துவக்கி உள்ளனர்.

ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் பெறப்பட்டு நெல் விதைத்திருந்த விவசாயிகள் நாற்றினை பறித்து தற்போது திருந்திய முறையில் இயந்திரங்கள் மூலம் நடவு பணிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த முறையில் விவசாயம் செய்வதன் மூலம் ஆள் பற்றாக்குறையை சுலபமாக சமாளிப்பதோடு, குறைந்த செலவில் குறுகிய காலத்தில் விவசாய பணிகளை மேற்கொள்ள முடிவதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதன்மூலம் நெல் விவசாயம் செய்யப்படும் பரப்பளவு அதிகரிக்க வாய்ப் புள்ளது. ஒருசில பகுதிகளில் விவசாயிகள் கோடை பயிராக பருத்தி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Nannilam ,Kudavasal ,
× RELATED அனல் பறக்கும் பிரசாரத்தில்...