×

திருவாரூர் அருகே வைப்பூர் நேரடி கொள்முதல் நிலையத்தில் 15,000 நெல் மூட்டைகள் தேக்கம்

திருவாரூர், ஏப். 12: திருவாரூர் அருகே வைப்பூர் அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் இரண்டு மாதமாக கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 15 ஆயிரம் நெல் மூட் டைகள் தேங்கி கிடப்பதால் அந்து பூச்சிகள் நெல்லில் புகுந்து சேதப்படுத்துவதாக சுமை துக்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பயிரிட்ட சம்பா நெல்லை அரசு நேரடியாக கொள்முதல் செய்து கொள்ளும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் திருவாரூர் அருகே உள்ள வைப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடஙக்ளில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் துவங்கப்பட்டு விவசாயிகளிட மிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில்,கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் சம்பந்தப்பட்ட துறையால் உரிய காலத்தில் எடுத்து செல்லப்படாமல் சுமார் இரண்டு மாத ங்களுக்கு மேலாக நெல் கொள்முதல் நிலையங்களிலே அப்படியே தேங்கி கிடக்கிறது.
அதில் ஒரு பகுதியாக திருவாரூர் அருகே உள்ள வைப்பூர் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல்கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 15 ஆயிரம் நெல் மூட்டைகள் அதிகாரிகளால் எடுத்து செல்லப்படாமல் தேங்கி கிடக்கிறது.

இதுகுறித்து, வைப்பூர் சுமைதூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் மூர்த்தி கூறுகையில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் முட்டைகள் 48 மணி நேரத்திற்குள் எடுத்து செல்ல வேண்டும் என விதி உள்ளது. எடை போடப்பட்ட நெல் மூட்டைகள் வெயிலில் காய்வதோடு மட்டுமல்லாமல் திடீரென கோடை மழை பெய்தால் நனைந்து சேதமடைய வாய்ப்புள்ளது. நெல் மூட்டைகளை அதிகாரிகள் எடுத்துச்செல்லாததால் அந்து பூச்சி நெல் மூட்டைகளில் புகுந்து சேதம் விளைவிக்கிறது. இதன் காரணமாக மூட்டை ஒன்றுக்கு சுமார் 4 கிலோ வரை எடை குறைவு ஏற்படுகிறது. இந்த இழப்பீட்டுக்கான தொகையை அங்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் தலையில் சுமத்தப்படுவது வேதனை அளிக்கிறது.

ஏற்கனவே, குறைந்த கூலிக்கு வேலை பார்க்கும் தொழிலாளர்கள் மிகவும் பாதிப்படைவதோடு தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் இழந்து நிற்கும் அவலநிலை உள்ளது. எனவே, தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை உடனடியாக சமபந்தப்பட்ட துறை அதிகாரிகள் எடுத்து செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழிலார்கள் சார்பில் வலியுறுத்துகிறோம் என்றார்.

Tags : Vaipur Direct Purchasing Station ,Thiruvarur ,
× RELATED வாக்கு சாவடிகளுக்கு அனுப்புவதற்காக...