காளையார்கோவிலில் தெருவிளக்குகள் இல்லை: திருடர்கள் தொல்லை

காளையார்கோவில், ஏப்.12: காளையார்கோலில் உள்ள பெரும்பாலான தெருக்களில் தெருவிளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரங்களில் பொது மக்கள் வெளியே வருவதற்கு அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

காளையார்கோவில் ஒன்றியம் 43 பஞ்சாயத்துகளை உள்ளடக்கியது. இது 300க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்ட பெரிய ஊராட்சியாகும். சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து பொதுமக்கள் அனைத்துத் தேவைகளுக்கும் காளையார்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். மேலும் மதுரை, காரைக்குடி, தொண்டி, பரமக்குடி ஆகிய ஊர்களுக்கு செல்லும் மையப்பகுதி என்பதால் இரவு மற்றும் பகல் நேரங்களில் வெளியூர் மற்றும் உள்ளூர் பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். இந்நிலையில் காளையார்கோவில் பஸ்நிலையத்தைச் சுற்றியுள்ள விளக்குகள் எரிவதில்லை. மேலும் போலீஸ் நிலையம் உள்பட நகரின் பல பகுதிகளில் உள்ள தெருவிளக்குகள் எரிவதில்லை. இதனால் திருடர்கள் ஜாலியாகியுள்ளனர். இப்பகுதியில் சில நாட்களாக திருட்டு, வழிப்பறி போன்றவைகள் நடைபெற்று வருகிறது. மதுரை - தொண்டி தேசிய நெடுஞ்சாலை மற்றும் பரமக்குடி, காரைக்குடி மாநில நெடுஞ்சாலைகளில் அதிகளவு கடைகள் மற்றும் வீடுகள் உள்ளன. இப்பகுதியில் இரவு 9 மணிக்கு மேல் கடைகள் அடைக்கப்படுவதால் இருள் சூழ்ந்த பகுதியாக

Related Stories: