×

ராமநாதபுரத்தில் அபராதம்

ராமநாதபுரம்: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அரசு பல்வேறு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. முகக்கவசம் அணிதல், போதிய சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் முகக்கவசம் அணியாதோருக்கு அபராதம் விதித்து முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவை தீவிரமாக அமல்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல் துறை சார்பில் தீவிர சோதனை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் உத்தரவிட்டார். இதன்படி, ராமநாதபுரம் காவல்துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை மேற்பார்வையில் போலீசார் நேற்று முன்தினம் அதிரடி சோதனை மேற்கொண்டனர். முகக்கவசம் அணியாமல் சாலைகளில் வாகனம் ஒட்டிச்சென்றோரை நிறுத்தி அபராதம் விதித்தனர். முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து அறிவுரை வழங்கினர். நேற்று முன்தினம் ஒரே நாளில் ராமநாதபுரம் பகுதியில் போலீசாரின் அதிரடி சோதனையில் முகக்கவசம் அணியாத 142 பேரிடம் தலா ரூ.200 வீதம் அபராதம் வசூலித்தனர். இச்சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்பதால் பொதுமக்கள் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணியாமல் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என்றனர்.

Tags : Ramanathapuram ,
× RELATED நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற...