×

15ம் தேதி நடக்கிறது புதிய வேளாண் சட்டங்களை நீக்க பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும்

தஞ்சை,ஏப்.12: புதிய வேளாண் சட்டங்களை நீக்க பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும் என்று தமிழக உழவர் இயக்கம் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. தஞ்சையில், தமிழக உழவர் இயக்கத்தின் துவக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு வந்தவர்களை ஏஐடியூசி மாவட்ட துணை செயலாளர் துரை.மதிவாணன் வரவேற்றார். கூட்டத்தில் தமிழக உழவர் இயக்கத்தின் தலைவராக திருநாவுக்கரசு தேர்வு செய்யப்பட்டார். அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்ஷோரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: வேளாண் சட்டங்களை நீக்க பாராளுமன்றத்தின் சிறப்பு அமர்வை கூட்ட வேண்டும். குறைந்தபட்ச ஆதார விலையையும், அரசாங்க கொள்முதலையும், சட்ட ரீதியான உரிமையாக்கவேண்டும்.
விவசாயத்தொழிலாளர்களுக்கு அவ்வப்போது உயர்ந்து வருகின்ற விலைவாசி உயர்வுக்கு ஏற்ப குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும். சுவாமிநாதன் குழு அறிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். விவசாயத்துக்கு டீசல் விலையில் 50 சதவீதம் மானியம் அளிக்க வேண்டும், மின்சார சட்டம் 2020, சுற்றுச்சூழல் வரைவுத் திட்டம் 2020 ரத்து செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசு மாநிலத்துக்கான துறைகளில் தலையிடக்கூடாது. டெல்லியில் போராடி வருகின்ற மற்றும் தமிழ்நாட்டில், போராடி வருகின்ற விவசாய அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாகிகள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்ட முடிவில் மக்கள் கலை இலக்கியக் கழக மாநகர செயலாளர் ராவணன் நன்றி கூறினார்.

Tags : Parliament ,
× RELATED மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில்...