பரமக்குடியில் லோக் அதாலத்தில் 24 வழக்குகளுக்கு தீர்வு

பரமக்குடி,ஏப்.12: பரமக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் பரமக்குடி நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தின்(லோக் அதாலத்) மூலம் 24 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. பரமக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் பரமக்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில்  நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கூடுதல் மாவட்ட நீதிபதி மலர்மன்னன், சார்பு நீதிபதி சிவாஜி செல்லையா ஆகியோர் தலைமை வகித்தனர். நீதித்துறை நடுவர் ராஜா, மாவட்ட உரிமையியல் நீதிபதி கமலக்கண்ணன் முன்னிலை வகித்தனர். பரமக்குடி வழக்கறிஞர் சங்க தலைவர் சேதுபாண்டி, செயலாளர் செல்லமணி,  பொருளாளர் இந்திரஜித் மற்றும் அமர்வு வழக்கறிஞர்களாக செந்தில்குமார் மற்றும் செல்வம் உள்பட வழக்கறிஞர்கள்  கலந்துகொண்டு மக்கள் நீதிமன்றத்தில் உள்ள 24 வழக்குகளில் ரூ.93 லட்சத்து 40 ஆயிரத்து 978  தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது.  மக்கள் நீதிமன்றத்திற்கான ஏற்பாடுகளை இளநிலை நிர்வாக உதவியாளர் முத்துவிஜயன் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.

Related Stories: