×

ரமலான் நோன்பு கஞ்சிக்கு பச்சரிசி வழங்க வேண்டும் தமிழக அரசிற்கு தமுமுக கோரிக்கை


தொண்டி, ஏப். 12: முஸ்லிம்கள் ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பதும், நோன்பினைத் துறக்க நோன்பாளிகளுக்கு இலவச நோன்புக் கஞ்சியை வழங்குவதும் வழக்கமான நடைமுறையாகும். ஆண்டுதோறும் நோன்புக் கஞ்சி தயாரிக்கத் தமிழக அரசின் சார்பில் அனைத்து பள்ளிவாசல்களுக்கும் இலவச பச்சரிசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றதாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதாலும் பள்ளிவாசல்களுக்கான அரிசி வழங்குவது தொடர்பான அறிவிப்பு தாமதமாகி வருகிறது. இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மாநில செயலாளர் சாதிக் பாட்சா கூறியதாவது: இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகை
யான ரம்ஜான் நோன்பிற்கு தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட பள்ளிவாசலுக்கு பச்சரிசி வழங்கப்படும். நோன்பு ஆரம்பிக்க இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில் இதுகுறித்து அரசின் அறிவிப்பு இன்னமும் வரவில்லை. அதனால் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Tamumuka ,Tamil Nadu government ,Ramadan ,
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...