இரை தேடும் மயில்கள் கொரோனா தொற்று பரவவாமல் இருக்க தஞ்சை மாரியம்மன் கோயிலில் பக்தர்களுக்கு சானிடைசர் வழங்கல்

தஞ்சை,ஏப்.12: கொரேனா தொற்று பரவாமல் இருக்க தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு சானிடைசர் வழங்கப்பட்டது. தஞ்சை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் பங்குனி அம்மாவாசை ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தனர். அவர்களுக்கு தமிழக அரசின் உத்தரவின்படி சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுரை கூறியும், பக்தர்கள் அனைவருக்கும் உடல் வெப்பநிலை கண்டறியப்பட்டது. மேலும் முகக்கவசம் கொடுத்து கைகளில், கிரிமி நாசினி தெளித்து பாதுகாப்புடன் சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. அதை முன்னிட்டு கோயிலுக்கு வரும் பக்தர்கள் அரசின் உத்தரவை ஏற்று சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>