திருவரங்குளம் பகுதியில் முத்துமாரியம்மன் பொங்கல் திருவிழா வீடுகளில் மக்கள் கொண்டாட்டம்

புதுக்கோட்டை, ஏப்.12: திருவரங்குளம் பகுதியில் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி மக்கள் வீடுகளில் பொங்கல் வைத்து கொண்டாடினர். புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வட்டாரப் பகுதிகளில் நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நார்த்தாமலை மாரியம்மன் கோயில் திருவிழா முன்னதாக நிறைவுற்றது. இந்நிலையில் திருவரங் குளம் வேப்பங்குடி பூவரசகுடி கைக்குறிச்சி கேப்பரை தோப்புக்கொல்லை, பூவரசகுடி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் முத்துமாரியம்மன் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வீடுகள் தோறும் மாவிலை தோரணங்களால் அலங்கரித்து மாக்கோலமிட்டு அம்பாளை எழுந்தருளச் செய்வது பொங்கல் வைத்து கொலுக்கட்டை பானகம் காப்பரிசி மாவு படையல் செய்தது வீடுகள்தோறும் மஞ்சள் தண்ணீர் தெளித்து கொரோனா வைரஸ் என்னும் கொடிய நோய் நாட்டை விட்டு வெளியேற வேண்டி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>