ரூ. 4.71 லட்சம் வசூல் புதுக்கோட்டையில் போதை ஊசி விற்ற 4 பேர் குண்டாஸில் கைது

புதுக்கோட்டை, ஏப்.12: புதுக்கோட்டையில் போதை ஊசி, மாத்திரை விற்று வந்த சாந்தநாதபுரம் ரமேஷ் மனோகர் மகன் சூரியநாராயணன்(19), சத்தியமூர்த்தி நகர் கணேசன் மகன் விக்னேஸ்(23), பெரியார் நகர் சுப்பையா மகன் பாண்டி(25), பூங்கா நகர் கருப்பையா மகன் பாஸ்கர்(34), ராஜகோபாலபுரம் ஆறுமுகம் மகன் அனுமந்தன்(19), பூங்கா நகர் அண்ணாசாமி மகன் அற்புதன்(34), அம்பாள்புரம் 1ம் வீதி திலகரத்தினம் மகன் சரண்(21) ஆகிய 7 பேரை கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களிடம் இருந்து ஏராளமான போதை மாத்திரைகள், போதை ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இந்நிலையில், பாண்டி, விக்னேஸ், பாஸ்கர்,அற்புதன் ஆகிய 4 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு எஸ்பி பாலாஜி சரவணன் அளித்த பரிந்துரையை ஏற்று கலெக்டர் உமா மகேஸ்வரி நேற்று உத்தரவிட்டார். இதையடுத்து, இவர்கள் 4பேரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories:

More