×

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக மாஸ்க் அணியாமல் வந்த 2,350 பேருக்கு தலா ரூ.200 அபராதம்

புதுக்கோட்டை, ஏப். 12: தமிழகத்தில் கெரானாவின் இரண்டாவது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும்பொருட்டு தமிழக அரசு பல்வேறு வகையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் கடந்த இரண் நாட்களுக்கு முன்பு பல்வேறு வகையான தடைகளை விதித்து வருகிறது. பொது இடங்களில் ஒன்று கூடாமல் சமூக இடைவெளியுடன் கடைபிடிக்க வேண்டும். அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் உள்ளிட்ட உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்து இரண்டு நாட்களாக போலீசார் பொது இடங்களில் மாஸ்க் அணியாதவர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர். மாஸ்க் அணியாதவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து வருகின்றனர்.

இதே போல் சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். குறிப்பாக நேற்று முன்தினம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள போலீசார், ஆயிரத்து 192 பேருக்கு மாஸ்க் அணியாததால் தால ரூ.200 வீதம் ரூ. 2லட்சத்து 38 ஆயிரத்து 400 அபராதம் விதித்துள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி சுமார் ஆயிரத்து 50 பேருக்கு ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். இதபோல் நேற்று முன்தினம் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் என 32 பேருக்கும் நேற்று சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள் 42 பேர் என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது:

கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக யார் மாஸ்க் அணியாமல் வந்தாலும் தயவு காட்டாமல் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனை பொதுமக்கள் சிரமமாக எடுத்துக்கொள்ள கூடாது. பொதுமக்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்து கொண்டுதான் வீட்டை விட்டு வெளியே வர வேண்டும். இல்லை என்றால் நாங்கள் அபராதம் விதிப்போம். கொரோனா பரவலை தடுக்க கட்டாயம் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றனர்.

Tags : Pudukkottai district ,
× RELATED மோசடி வழக்கில் தலைமறைவான...