தேசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி போட்டி மதுரை மாணவர் அசத்தல்

மதுரை, ஏப்.12: தேசிய ரோலர் ஸ்கேட்டிங் ஹாக்கி விளையாட்டு போட்டியில், மதுரை மாணவர் சாதித்ததால் 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக அணிக்கு வெற்றி கிடைத்துள்ளது. சண்டிகர் மாநிலத்தில் தேசிய ஸ்கேட்டிங் போட்டி இறுதி சுற்றுகள் நடந்தன. இதில் தமிழ்நாடு ஸ்கேட்டிங் குழுவின் சார்பில், மதுரை மகாத்மா  மாண்டிச்சேரி மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவன்  ஜெய்வர்ஷன் வெற்றி பெற்று வெள்ளிப்பதக்கம் பெற்றார். இவர் 5 வயது முதலில் இருந்தே ஸ்கேட்டிங் போட்டியில் பங்கேற்று வருகிறார். மாவட்ட அளவிலான போட்டியில் இரண்டு முறை பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். தற்போது தேசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு குழுவிற்கு விளையாடச் சென்று வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார். பதக்கம் பெற்ற மாணவனை தமிழ்நாடு ஸ்கேட்டிங் சங்கம், பயிற்சியாளர் சந்தானம் ஆகியோர் பாராட்டினர். தமிழ்நாடு அணிக்கு 12 ஆண்டுகளுக்குப்பிறகு இந்த வெற்றி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>