×

ஒட்டன்சத்திரம் பகுதியில் ‘மா’ சீசன் தொடக்கம் விலை குறைவால் விவசாயிகள் கவலை

ஒட்டன்சத்திரம், ஏப். 12: ஒட்டன்சத்திரம் பகுதியில் மா சீசன் தொடங்கியுள்ள நிலையில், விலை குறைவால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். ஒட்டன்சத்திரம் தாலுகாவில் சத்திரப்பட்டி, தாசரிபட்டி, புதுக்கோட்டை, இராமபட்டிணம்புதூர், விருப்பாட்சி மற்றும் வடகாடு உள்ளிட்ட மலை கிராமங்களில் மாந்தோப்புகள் அதிகமாக உள்ளன. பொதுவாக பங்குனி மாதம் முதல் ஆவணி மாதம் வரை மா சீசன் இருககும். தற்போது இப்பகுதியில் மா விளைச்சல் துவங்கியதுடன் மழை லேசாக பெய்து வருவதால், விளைச்சல் ஓரளவு இருக்கும் என இப்பகுதி விவசாயிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டைக் காட்டிலும், மாங்காய்களின் விலை வீழ்ச்சியடைந்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு ஒரு கிலோ கல்லாமணி ரூ.100க்கும், செந்தூர ரூ.40 முதல் ரூ.45க்கும், நீலா மற்றும் நாட்டுக்காய் ரூ.30க்கும் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்பட்டது.

தற்போது ஒருகிலோ கல்லாமணி ரூ.25-க்கும், செந்தூரா ரூ.15க்கும், நீலா மற்றும் நாட்டுக்காய் ரூ.20க்கும் கொள்முதல் செய்யப்படுகிறது. கேரள மக்கள் அதிகளவில் மாங்காய்களை ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் அதிகளவில் கொள்முதல் செய்து வருவது வழக்கம். ஆனால், கேராளாவிலும் மா மரங்கள் அதிகம் நடவு செய்துள்ளதால் அங்கு விளைச்சல் ஓரளவு உள்ளதால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்கெட்டில் கொள்முதல் குறைந்துள்ளது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டிற்கு கிருஷ்ணகிரி மாவட்டம், நத்தம் வேம்பார்பட்டி மற்றும் உள்ளூகளிலிருந்து தினமும் 10 டன்கள் கொள்முதல் செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர். ஒட்டன்சத்திரம் காய்கறி மார்கெட்டிலிருந்து தமிழ்நாடு மற்றும் கேரளாவிற்கு மாங்காய் லாரிகள் மூலம் தினமும் அனுப்பப்படுகிறது.

Tags : Ottanchattiram ,
× RELATED ஒட்டன்சத்திரம் அருகே டச்சு நாணயம் கண்டெடுப்பு