திரளான பக்தர்கள் பங்கேற்பு ஜெயங்கொண்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெப்பம் தணிந்து

ஜெயங்கொண்டம், ஏப்.12: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வெயிலுக்கு இதமாக நேற்று மதியம் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. அதிலும் சில நாட்களாக அனல் காற்று வீசி அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. இதையடுத்து வெப்பம் சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அண்மையில் அறிவித்து இருந்தது.

இந்நிலையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் கடந்த சில தினங்களாகவே சுட்டெரிக்கும் வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில், நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் லேசான வெயில் காணப்பட்டது.

இதைத்தொடர்ந்து மதியம் சுமார் 1 மணி அளவில் வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென சாரல் மழை பெய்தது. ஆரம்பத்தில் மிதமாக பெய்த மழையானது, பின்னர் அதன் தாக்கம் அதிகரித்து இடியுடன் கூடிய கனமழையாக மாறி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன கொட்டி தீர்த்தது.

இதனால் தெருக்களில் வெள்ளம் போல் மழை நீர் ஓடியது. கடந்த சில தினங்களாக கோடை வெப்பம் பொதுமக்களை வாட்டி வதைத்த நிலையில் ஜெயங்கொண்டத்தில் கொட்டி தீர்த்த கன மழை காரணமாக வெப்பம் தணிந்து பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>