கோவில்பட்டி, சாத்தான்குளத்தில் மக்கள் நீதிமன்றத்தில் 41 வழக்குகளுக்கு தீர்வு

கோவில்பட்டி, ஏப்.12: கோவில்பட்டி சப்கோர்ட்டில் தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) நடந்தது.  நீதிபதி அகிலாதேவி தலைமை வகித்தார். விரைவு கோர்ட் மாஜிஸ்திரேட் பரத்வாஜ் ஆறுமுகம், மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன், மாஜிஸ்திரேட் பாரதிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மொத்தம் 347 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 27 வழக்குகள் தீர்வு காணப்பட்டன. இதில் அரசு வழக்கறிஞர் முருகேசன், வக்கீல்கள் இளங்கோ, மகேந்திரன், சிவா, சுந்தரபாண்டியன், ராஜேஸ்வரி மற்றும் அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சாத்தான்குளம்:   சாத்தான்குளத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரமேஷ் தலைமையில் குற்றவியல் நீதிபதி சரவணன் முன்னிலையில் நடந்தது. மொத்தம் 83 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 14 வழக்குகள் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. இதில் அரசு வக்கீல் கல்யாணகுமார், வக்கீல்கள் பஞ்சாப்சேகர், ஆரோன் டேவிட், வில்லியன் பெலிக்ஸ், ஜோஜெகதீஷ், வாசகராஜன், அந்தோணி ரமேஷ்குமார், சுரேஷ், வேணுகோபால் மைக்கேல், சுடலைமுத்து, சஷ்டிகுமரன், குமரேசன், மணிகண்டன், விஜய், ராமச்சந்திரன் உள்ளிட்ட நீதிமன்ற பணியாளர்கள்  கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>