சுகாதார ஆய்வாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கொரோனாவால் அதிகரிக்கும் பணிச்சுமை காலி பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

சுரண்டை, ஏப்.12: கொரோனா தொற்று பரவலால் பணிச்சுமை அதிகரித்துள்ளதால் மாநில அளவில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என சுரண்டையில் நடந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்காசி மாவட்ட சுகாதார ஆய்வாளர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மாநில தலைவர் கங்காதரன் தலைமையில் சுரண்டையில் உள்ள தனியார் பள்ளியில் நடந்தது. கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தலைவராக வேலு, துணைத்தலைவராக கருப்பசாமி, செயலாளராக கணேசன், இணைச் செயலாளர்களாக வெங்கடேசன், ஆனந்தராஜ், சங்கரன், பொருளாளராக புன்னைவனம், தணிக்கையாளர்களாக பாலு, குருமூர்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கூட்டத்தில் பொது சுகாதாரத் துறையில் மாநில அளவில் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சுகாதார ஆய்வாளர்களின் பணி நேரம் வரையறுக்கப்பட வேண்டும். ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பணிசெய்ய வற்புறுத்தக் கூடாது. கொரோனா காலத்தில் மாஸ்க் அணியாத பொதுமக்களிடம் அபராதம் வசூலிப்பது விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இதில் குறியீடு நிர்ணயிக்கக் கூடாது. டெங்கு, கொரோனா போன்ற தொற்று நோய்கள் பரவும் காலத்தில் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி மாரியப்பன், கதிரவன், கிருஷ்ணகிரி, மாவட்ட தலைவர் அய்யனார், கணேசன், சுப்பையா, கிருஷ்ணமூர்த்தி, பத்மநாபன், பாலசுப்பிரமணியன், ராஜேந்திரகுமார் உட்பட தென்காசி மாவட்ட உறுப்பினர்கள் பங்கேற்றனர். கருப்பசாமி நன்றி கூறினார்.

Related Stories:

>