×

கடையநல்லூரில் பேரிடர் மீட்பு பயிற்சி

கடையநல்லூர், ஏப்.12:  கடையநல்லூரில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்பு பணிகள் துறை சார்பில் தன்னார்வ தொண்டர்களுக்கு தீ தடுப்பு பாதுகாப்பு, விபத்துக்கால மீட்பு பணி மேற்கொள்வது மற்றும் வெள்ள காலங்களில் சிக்கியவர்களை எவ்வாறு மீட்பது குறித்து ஒரு நாள் சிறப்பு பயிற்சி செயல்முறை விளக்கத்துடன் அளிக்கப்பட்டது. தென்காசி மாவட்ட தீயணைப்பு அலுவலர் உத்தரவின்படி தன்னார்வ தொண்டர்களுக்கு தீ தடுப்பு பாதுகாப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. முகாமிருக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகர் தலைமை வகித்தார். போக்குவரத்து சண்முகசுந்தரம், பணியாளர்கள் மாரிகுமார், ராமகிருஷ்ணன், மகேஷ் உள்ளிட்ட பணியாளர்கள் தன்னார்வத் தொண்டர்களுக்கு செயல்விளக்கம் அளித்தனர்.

Tags : Kadayanallur ,
× RELATED பாம்பு கடித்து விவசாயி பலி