×

மீனவர்கள் கோரிக்கை மயிலாடுதுறையில் முகக்கவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளிடம் அபராதம் வசூல்

மயிலாடுதுறை, ஏப்.12: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை அதிகரித்து வருவதை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை கட்டுப்பாடுகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி உள்ளது. அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்களுக்கு நகராட்சி நிர்வாகத்தினர் ரூ. 200 அபராதம் விதித்து வருகின்றனர். முகக்கவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால் மயிலாடுதுறையில் ஒரு சில பெட்ரோல் பங்குகளை தவிர பெரும்பாலான பெட்ரோல் பங்குகளில் முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு பெட்ரோல் வழங்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை நகரில் காவல்துறையினர் தற்பொழுது முகக்கவசம் அணியாமல் வரும் இருசக்கர வாகனஓட்டிகளை தீவிரமாக கண்காணித்துவருகின்றனர், முகக்கவசம்அணியாமல் செல்லும் நபர்களைப் பிடித்து ரூ.200 அபராதம் வசூல் செய்கின்றனர்.

Tags : Fishermen ,Mayiladuthurai ,
× RELATED இலங்கை சிறையிலிருந்து...