கோயம்பள்ளியில் புதிய குளத்தை சீரமைக்க கோரிக்கை

கரூர், ஏப். 12: கரூர் மாவட்டம் கோயம்பள்ளி அரசு பள்ளி எதிரே உள்ள புதிய குளத்தை சீரமைக்க வேண்டும் என இந்த பகுதியினர் எதிர்பார்க்கின்றனர். கரூர் மாவட்டம் கோயம்பள்ளியில் இருந்து சோமூர் செல்லும் சாலையோரம் அரசு பள்ளி எதிரே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு புதிய குளம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. தண்ணீர் தேக்கி வைத்து பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் இந்த குளம் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது கோரைப்புற்கள் வளர்ந்து குளத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. எனவே, இந்த குளத்தை சீரமைக்க வேண்டும் என பகுதியினர் எதிர்பார்ப்பில் உள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முட்புதர்கள் வளர்ந்துள்ள இந்த குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் விரைந்து மேற்கொள்ள வேண்டும் என இந்த பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>