கரூர் அரசு காலனி பிரிவு அருகே உயர்கோபுர மின்விளக்கு அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

கரூர், ஏப்.12: கரூர் அரசு காலனி பிரிவு அருகே உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் எதிர்பார்க்கின்றனர். கரூரில் இருந்து வாங்கல், நெரூர், சோமூர், திருமுக்கூடலூர், மண்மங்கலம், ரெங்கநாதம்பேட்டை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் அரசு காலனி வழியாக செல்கிறது. அரசு காலனி அருகே வாங்கல் பகுதிக்கும், நெரூர், சோமூர் பகுதிக்கும் என மூன்று வழிகளில் போக்குவரத்து நடைபெறுகிறது. அதிகளவு கிராம பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகள் என்பதால் இந்த அரசு காலனி பிரிவு வழியாக தினமும் நூற்றுக்கணக்கான இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களும், அரசு மற்றும் தனியார் பஸ் போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.

மேலும், அரசு காலனி பிரிவு அருகே வர்த்தக நிறுவனங்கள், தனியார் பள்ளியும் உள்ளது. இதன் காரணமாக, இரவு நேரத்திலும் பிசியான பகுதிகளில் இதுவும் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து நடைபெற்று வரும் நிலையில் இந்த சந்திப்பு பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது. இது குறித்துஇந்த பகுதியினர் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கோரிக்கை வைத்து உள்ளனர். ஆனால, இதுநாள் வரை அமைத்து தரப்படாமல் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பு பகுதியில் உயர்மின் கோபுர விளக்கு அமைக்க தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories:

More
>