×

முல்லைநகர் பகுதி குடிநீர் தொட்டியை சுற்றி வளர்ந்துள்ள முட்புதர்கள்

கரூர், ஏப். 12: கரூர் காந்திகிராமம் முல்லை நகர் பகுதியில் மேல்நிலை தொட்டி அருகில் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்திகிராமம் முல்லை நகர்ப்பகுதியில் குடியிருப்பு பகுதிகளின் மத்தியில் மேல்நிலை தொட்டி உள்ளது. இந்த தொட்டி வளாக பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான குடியிருப்பு பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மேல்நிலை குடிநீர் தொட்டி வளாகத்தை சுற்றிலும் அதிகளவு முட்செடிகள் வளர்ந்துள்ளதால் விஷ ஐந்துகளின் நடமாட்டமும் அதிகளவு உள்ளது.

எனவே, காடு போல வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற வேண்டும் எனவும் பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை பார்வையிட்டு சுற்றிலும் வளர்ந்துள்ள முட்செடிகளை அகற்ற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : Mullainagar ,
× RELATED வாகன ஓட்டிகள் அவதி மொபட்டில் இருந்து விழுந்து வாட்ச்மேன் உயிரிழப்பு