கெட்டுபோன பப்ஸ் விற்பதாக புகார் தியேட்டரில் வருவாய் துறையினர் விசாரணை

பள்ளிபாளையம்,ஏப்.12:  பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் சரவணன். இவர் கண்ணனூர் மாரியம்மன் கோயில் பகுதியில் உள்ள சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்றுள்ளார். இடைவேளையின் போது அங்குள்ள கேன்டீனில் பப்ஸ் வாங்கி சாப்பிட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவருக்கு தாங்க முடியாத வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்ததில் கெட்டுப்போன உணவை சாப்பிட்டதால், உணவு விஷமாக மாறி, வயிறு வலி ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து விசாரணை நடத்த வருவாய்துறையினருக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதன் பேரில், பள்ளிபாளையம் வருவாய் ஆய்வாளர் சரவணமூர்த்தி, கிராம நிர்வாக அதிகாரி சாந்தகுமார் ஆகியோர், நேற்று சினிமா தியேட்டர் கேன்டீனில் ஆய்வு செய்தனர். அங்குள்ள உணவு பொருட்களின் மாதிரிகள் சேகரித்து ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அப்போது, கெட்டுப்போன உணவு பொருட்களை விற்பனை செய்ய கூடாது என கேன்டீன் உரிமையாளரை அதிகாரிகள் எச்சரித்தனர்.

Related Stories:

>