கொல்லிமலை வன அலுவலகத்தில் காடு வளர்ப்பு பயிற்சி

சேந்தமங்கலம், ஏப்.12: கொல்லிமலையில் வன அலுவலகத்தில் காடு வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. சேந்தமங்கலம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில், கொல்லிமலை வாழவந்தி நாடு ஊராட்சி செம்மேட்டில் உள்ள வனத்துறை அலுவலகத்தில், காடுகள் வளர்ப்பு பயிற்சி முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கொல்லிமலை வனச்சரகர் சுப்பராயன் தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் இந்தராணி முன்னிலை வகித்தார். இதில் நாமக்கல் பிஜிபி வேளாண்மை கல்லூரியில் இறுதி ஆண்டு படிக்கும் மாணவிகள், கிராம தங்கல் திட்டத்தின் மூலம், காடு வளர்ப்பு முறை பற்றியும், ஒரு மரக்கன்று நடவு செய்தால் எத்தனை நாட்கள் பராமரிப்பு செய்ய வேண்டும் என்பது குறித்தும், புதிய காடுகளை உருவாக்குவது அதிக அளவில் மழை வளம் பெறமுடியும் என்பதை செயல்முறை விளக்கம் அளித்தனர். இதையடுத்து வனவர்கள் தமிழ்வேந்தன், நிஷாந்த் ஆகியோர் 13 ஒதுக்கபட்ட காடுகள் பற்றியும், 6 ஒதுக்கப்பட்ட நிலங்களைப் பற்றியும் மேலும் காடு வளர்ப்புத் திட்டம் மற்றும் வனக்குழு மூலம் காடு வளர்ப்பு, நிலையான காடு பாதுகாத்தல் பற்றி பேசினர்.

Related Stories:

>