காரிமங்கலம் அருகே கொரோனா பரிசோதனை தீவிரம்

காரிமங்கலம், ஏப்.12: காரிமங்கலம் அடுத்த மாட்லாம்பட்டியில் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனை செய்தனர். காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பைசுஅள்ளி ஊராட்சி மாட்லாம்பட்டியில், கொரோனா வைரஸ் தாக்கி 55வயது மதிக்கத்தக்க பெண் இறந்ததுடன், 27பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாட்லாம்பட்டி பகுதி சீல் வைக்கப்பட்டு, கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, சுகாதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாட்லாம்பட்டி பகுதியில், சுகாதாரத்துறை சார்பில் கொரோனா வைரஸ் பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 100க்கும் மேற்பட்டவர்களிடம் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், வரும் நாட்களில் பரிசோதனைகளை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>