ஊத்துக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு பேரணி

ஊத்துக்கோட்டை, ஏப். 12: ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் வணிகர்கள் மற்றும் காவல் துறை சார்பில்,  கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. இதில், வணிகர் சங்க தலைவர் நடராஜன்  தலைமை தாங்கினார். சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணி வரவேற்றார். இன்ஸ்பெக்டர் குமார், எஸ்.ஐ சுப்பிரமணி, வணிகர் சங்க செயலாளர் செல்வகுமார், பொருளாளர் திலீப், துணை செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக ஊத்துக்கோட்டை  டிஎஸ்பி சாரதி கலந்துகொண்டு கொரோனா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தனர்.

இந்த பேரணி போலீஸ் சோதனை சாவடி அருகே தொடங்கி நாகலாபுரம் சாலை,  திருவள்ளூர் சாலை, அண்ணாசிலை வழியாக நேரு பஜார், நேரு சாலை என முக்கிய வீதிகளின் வழியாக சென்றது. மேலும், முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. மேலும், ஊத்துக்கோட்டை தமிழக - ஆந்திர எல்லைப்பகுதியில் உள்ளதால் ஆந்திராவில் இருந்து பைக் உள்ளிட்ட வாகனங்களில் வந்தவர்களை இனி முககவசம் இல்லாமல் தமிழக எல்லைக்குள் வரக்கூடாது என  எச்சரித்து முககவசம் வழங்கி அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>