×

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் தாமதம்

திருப்பூர்,  ஏப். 10: திருப்பூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் உணவு வழங்குவதில்லை என்ற  குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 20155 ஆக இருந்தது. திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனாவுக்கு நேற்று முன்தினம் நிலவரப்படி 155 நோயாளிகள் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் அவர்களுக்கு மருத்துவமனை  சார்பில் வழங்கப்படும் உணவு சரியான நேரத்திற்கு வழங்கவில்லை என  புகார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கொரோனா வார்டில் சிகிச்சை பெறும்  சிலர் கூறியதாவது: கொரோனா நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனையில் உணவு சரியான நேரத்திற்கு  கிடைப்பதில்லை. காலை 8 மணிக்கு தர வேண்டிய உணவு 10 மணிக்கு தான் தருகின்றனர். மதிய   உணவு 2 மணிக்கு மேல் தான் தருகின்றனர். இங்கு வயது முதியவர்கள் நிறைய பேர்  சிகிச்சை பெற்று வருகின்றனர். காலதாமதமாக உணவு வழங்குவதால் அவர்கள் பாதிக்கின்றனர். மருத்துவமனை நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
இது குறித்து மருத்துவமனை டீன் வள்ளி சத்தியமூர்த்தியிடம் கேட்டபோது,
கொரோனாவால்  பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் தான் உணவு தயாரித்து விநியோகம்  செய்து கொண்டிருக்கிறோம். நோயாளிகளுக்கு சரியான நேரத்திற்கு உணவு விநியோகம்  செய்து கொண்டிருகிறோம். சில நோயாளிகளுக்கு வீட்டிலிருந்து உணவு வருவதால்  மருத்துவமனை சார்பில் தரப்படும் உணவுகளை வாங்குவதில்லை. அப்படியே சிலர்  வாங்கினாலும் அதனை வீண் செய்து விடுகின்றனர். இவ்வாறு கூறினர்.

Tags : Government Hospital ,
× RELATED மதுரை அரசு மருத்துவமனையில் இருந்து...