கோவையில் 2 பேர் தற்கொலை

கோவை, ஏப்.9: கோவை ராமநாதபுரம் அருகே உள்ள எஸ்.என்.வி லே அவுட் பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவர் மகள் கிருஷ்ணசங்கரி (30). இவர் திருமணம் செய்து தனது கணவரை விவாகரத்து செய்து விட்டார். இரண்டாவதாக திருமணம் செய்தும் அவருடன் வாழ பிடிக்காமல் விவாகரத்து செய்துவிட்டார். இரு முறையும் விவாகரத்து ஆனதால் மனமுடைந்து காணப்பட்ட இவர் தனது வீட்டில் யாரும் இல்லாதபோது சாணி பவுடர் குடித்து தற்கொலை செய்து கொண்டார் .

 மாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (35). கூலி தொழிலாளி இவருக்கு பல இடங்களில் மணப்பெண் தேடியும் கிடைக்கவில்லை. விரக்தியில் காணப்பட்ட இவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Related Stories:

>