×

ரூ.11 லட்சம் கையாடல் செய்த வழக்கு இ.எஸ்.ஐ. காசாளருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு

கோவை, ஏப்.10: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இ.எஸ்.ஐ. (எம்பிளாயிஸ் ஸ்டேட் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. பெங்களூரை சேர்ந்த கிருஷ்ணமோகன் (40) என்பவர் காசாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரை இ.எஸ்.ஐ. பயனாளிகளுக்கு கிடைக்கவேண்டிய காப்பீட்டு தொகையை சிறிது சிறிதாக கையாடல் செய்து வந்ததாக தெரிகிறது.
இந்த விவரங்கள் இன்சூரன்ஸ்  நிறுவனத்தின் தணிக்கையின்போது கண்டறியப்பட்டது. இ.எஸ்.ஐ. பயனாளிகளின் பெயரில் இருந்து ரூ.11 லட்சம் கையாடல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து இ.எஸ்.ஐ. நிறுவனம் அளித்த புகாரின் பேரில் கடந்த 2016ம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணமோகனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ. 90 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி நாகராஜன் தீர்ப்பளித்தார்.

Tags : ESI ,CBI court ,
× RELATED இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரியை...