மேட்டுப்பாளையத்தில் திமுக சார்பில் கபசுர குடிநீர், மாஸ்க் வழங்கல்

மேட்டுப்பாளையம், ஏப்.10 கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் மேட்டுப்பாளையத்தில் திமுக சார்பில் கபசுர குடிநீர், முக கவசம் வழங்கப்பட்டது.

மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான டி.ஆர்.சண்முகசுந்தரம் தலைமை தாங்கி அந்த வழியே நடந்து சென்ற பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பயணிகளுக்கு கிருமிநாசினி, முக கவசம், கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், நகர செயலாளர்கள் முகமது யூனுஸ், வக்கீல் முனுசாமி, கலிங்க கணேசன், முகமது ஜலீல், லக்கி ஜாகீர், மனோகரன், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>