சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில்களில் பங்குனிப் பொங்கல் திருவிழாக்களுக்கு தடை நேர்த்திக்கடன் பக்தர்கள் வேதனை

சிவகாசி, ஏப். 10: கொரோனா தொற்றால் சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில்களில்

பங்குனி பொங்கல் திருவிழாக்களில் பக்தர்களுக்கு வருவாய்த்துறை தடை விதித்துள்ளதால், நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

சிவகாசி, திருத்தங்கல் மாரியம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெறும். கடந்த ஆண்டும் கொரோனா தொற்று காரணமாக பங்குனி பெர்ங்கல் திருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், சிவகாசி மாரியம்மன் கோயில், திருத்தங்கல் மாரியம்மன் கோயில்களில் பங்குனி பொங்கல் திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு இன்று முதல் கோயில் திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனால், நாளை கொடியேற்றத்துடன் திருவிழா துவங்க இருப்பதால் கோயில் நிர்வாகஸ்தர்கள், சப்கலெக்டர் தினேஷ்குமாரை சந்தித்து அனுமதி கேட்டனர். கொரோனா தொற்றால் தமிழக அரசு தடை விதித்ததை சுட்டிக்காட்டி திருவிழாக்களுக்கு தடை விதித்தார். இது குறித்து திருத்தங்கல் மாரியம்மன் கோவில் செயலாளர் கருப்பசாமி கூறுகையில், ‘கோயில் கொடியேற்ற நிகழ்ச்சியில் நிர்வாகிகள் மட்டும் பங்கேற்க வேண்டும். சமூக இடைவெளியுடன் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற வேண்டும். கயறு குத்து விழா, அக்னிச்சட்டி எடுத்தல் தேரோட்டம், போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திருவிழா அன்று கோயிில் நிர்வாகிகள் மட்டும் பங்கேற்ற வேண்டும். பகதர்களுக்கு அனுமதி கிடையாது. கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என வருவாய்த்துறை அதிகாரிகள் கூறினர். அரசு விதிகளின்படி கோயில் திருவிழா நடைபெறும்’ என்றார்.

Related Stories:

>