சிவன்கோயிலில் குருபூஜை

ராஜபாளையம், ஏப். 10: ராஜபாளையம் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயிலில் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது.

ராஜபாளையத்தில் மதுரை சாலையில் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில்,

குருபூஜை விழாவை முன்னிட்டு நேற்று காலை சுவாமிக்கு 16 வகையான நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து முப்பழம் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் திருச்சிற்றம்பல குருநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Related Stories:

>