தேனி அருகே விபத்தை உருவாக்கும் வளைவு நெடுஞ்சாலை துறை அலட்சியம்

தேனி, ஏப். 10: தேனி அருகே மல்லையகவுண்டன்பட்டியில் இருந்து பூமலைக்குண்டு செல்லும் சாலையில் தடுப்பு கம்பிகள் அமைக்காமல் பாதுகாப்பு இல்லாத வளைவு சாலையால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

தேனி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தேசிய நெடுஞ்சாலைத் துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை, கிராம நிர்வாக சாலைகள் உள்ளன. இதில் தேனியில் இருந்து கண்டமனூர், சீப்பாலக்கோட்டை சாலைகள் மாநில நெடுஞ்சாலைத்துறை மூலம் பராமரிக்கப்படுகிறது.

இதில் வெங்கடாசலபுரத்தில் இருந்து காட்டுநாயக்கன்பட்டி, மல்லையக்கவுண்டன்பட்டி வழியாக பூமலைக்குண்டு செல்லும் சாலை மாநில நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. இச்சாலையில் மல்லையக்கவுண்டன்பட்டிக்கும், பூமலைக்குண்டுவிற்கும் இடையே உள்ள சாலையில் ஒரு பகுதியில் ஆபத்தான வளைவு உள்ளது. இந்த வளைவினை ஒட்டி சுமார் 6 அடி உயரத்திற்கு அருகே உள்ள கிராமத்திற்கு செல்லக்கூடிய வகையில்  தாழ்வான மண்சாலை உள்ளது.

மல்லையக்கவுண்டன்பட்டியில் இருந்து இரவு நேரங்களில் வரும் வாகனங்கள் இந்த வளைவில் திரும்பும்போது சில நேரங்களில் வளைவினைஒட்டியுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகும் ஆபத்து உள்ளது.  

எனவே, நெடுஞ்சாலைத் துறையினர் இச்சாலையை ஆய்வு செய்து, ஆபத்தான வளைவு பகுதியில் தடுப்பு கம்பிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>