×

தேவாரத்தில் தனியார் வாகனங்களில் கண்களை கூசச்செய்யும் லைட்டுகளால் விபத்து

தேவாரம். ஏப்.10: தேவாரம் பகுதிகளில், இரவு நேரத்தில் தனியார் வாகனங்களில் ஒளிரும் வைட்கள் போடப்படுவதால் விபத்து ஏற்படும் ஆபத்து உள்ளது.
தேவாரம், கோம்பை, போடி, கம்பம்,  உத்தமபாளையம் உள்ளிட்ட ஊர்களில் அதிகமான வாகன விபத்துக்கள் நடக்கிறது. இரவு நேரங்களில், தனியார் ஆம்னி, லாரி, கார்கள், ஜீப் உள்ளிட்ட  வாகனங்களில் அதிக மின் ஒளி தரக்கூடிய பல்பினை பொருத்தி இயக்குவதால் விபத்துக்கள் அதிக அளவில் நடக்கின்றன. ஒளிரும் லைட்களை தடுக்க வேண்டிய வட்டார போக்குவரத்துறையை சேர்ந்த அதிகாரிகள் தடுப்பதில்
லை.
வாகனத்தின் முன்புறம், கருப்பு ஸ்டிக்கர்களை, ஒட்டி விபத்துக்களை தடுக்கலாம் என்று  பொதுமக்கள் கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. தேனி மாவட்டத்தில்,
இரவு நேரங்களில் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள அதிக திறன்,வாய்ந்த ஒளிரும் லைட்டுகளை, பயன்படுத்தி இயக்குவதால் அதிக அளவில் விபத்துகள் ஏற்பட்டு வருவதால்,  
தொடர்ந்து விபத்துக்கள் நடக்கிறது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில்,  விபத்துக்களைத் தடுக்க வட்டார போக்குவரத்து மற்றும் காவல் துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் வாகனங்களில் கருப்பு ஸ்டிக்கரை ஒட்டினால் இரவு நேர விபத்துக்களை தடுக்க வசதியாக இருக்கும் என்றனர்.

Tags : Thevaram ,
× RELATED தேவாரம் பகுதியில் பனியால் மல்லிகை சாகுபடி பாதிப்பு