வெண்ணியாறு அணையில் மூழ்கி வாலிபர் மாயம்

சின்னமனூர், ஏப். 10:  ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள வெண்ணியாறு அணையில் குளித்த மருத்துவ பிரதிநிதி மாயமானார்.

தேனி மாவட்டத்தில் மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்தவர் மதன்குமார்(29). இவர் தனது 3 நண்பர்களுடன் ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றார். அப்போது நான்கு பேரும் வெண்ணியாறு அணையில் குளித்துள்ளனர். இதில் மதன்குமார் மட்டும் சகதியில் சிக்கிக் கொண்டார். அவரை மீட்க நண்பர்கள் முயற்சி செய்தனர். ஆனால், முடியவில்லை.

 உடனடியாக அவர்கள் ஹைவேவிஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எஸ்ஐ தனிக்கொடி தலைமையிலான போலீசார் வெண்ணியாறு அணைக்கு  விரைந்தனர். இரவு நேரம் என்பதால் மீட்புப்பணி இன்று (ஏப்.10)  பகலில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>