பெரியகுளம் தோட்டக்கலை மாணவிகள் மூலிகை பண்ணையில் ஆய்வு

கம்பம், ஏப். 10: பெரியகுளம் அரசு தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இறுதியாண்டு பயின்றுவரும் மாணவிகள் கிராமப்புற தோட்டக்கலை பணி அனுபவ திட்டத்தின்கீழ் தங்கி பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் நேற்று கம்பம்மெட்டு அடிவார பகுதியில் உள்ள டாக்டர் கலையமுதனின் மூலிகைப் பண்ணையை பார்வையிட்டனர். அங்கிருந்த அரிய வகை மூலிகைகளான சிவப்பு கற்றாழை, சிற்றரத்தை, சர்க்கரை வேம்பு, கருங்காலி, கருமஞ்சள், வெட்பாலை, குறுந்தொட்டி, குடம்புளி, உட்பட நூற்றுக்கும் அதிகமான மூலிகை தாவரங்கள் மற்றும் அவற்றின் மருத்துவ பயன்களை டாக்டர் கலையமுதன் மாணவிகளுக்கு விளக்கி கூறினார். நிகழ்ச்சியில் மாணவிகள் சிரியா ராஜ், சுவாதி, தாரிணி, வைதேகி, வினிஷா, ஆர்த்தி, அபிஷ்மா கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>