×

கால்வாய் அடைப்பால் தெருவில் தேங்கி கிடக்கும் கழிவுநீர் காரைக்குடி 16வது வார்டில் அவலம்

காரைக்குடி, ஏப்.10: காரைக்குடி 16வது வார்டு காட்டுத்தலைவாசல் ஆசத் தெருவில் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளும், 5000க்கும் மேற்பட்ட தெருக்களும் உள்ளன. 150 கிலோ மீட்டருக்கு மேல் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கால்வாய்கள் தற்போது மண், குப்பைகள் அடைத்தும் ஒருசில பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் சிக்கி உள்ளது. கால்வாய்களை முறையாக சுத்தப்படுத்துவது கிடையாது. கால்வாய்கள் தண்ணீர் முறையாக வெளியேறும் விதமாக அமைக்காமல் பெயரளவில் கட்டப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் முறையாக செல்லமுடியாமல் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. 16வது வார்டு காட்டுத்தலைவாசல் ஆசாத் தெருவில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும்
கழிவுநீர் கால்வாய் கடந்த ஒரு மாதத்துக்கு மேல் அடைபட்டு கிடக்கிறது. இதனால் கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி கிடக்கிறது.
இப்பகுதியை சேர்ந்த ரியாஸ் கூறுகையில், கழிவுநீர் செல்லும் வகையில் இருந்த பாலம் மண்அடைத்து இருந்த இடம் தெரியாமல் போய் உள்ளது. சாலை அமைக்கும் போது பாலத்தை உயர்த்தி கட்டாமல் கடமைக்கு என போட்டு விட்டு சென்றுவிட்டனர். இதனால் பாலம் மண்ணோடு மண்ணாக அமுங்கி போய் கிடக்கிறது. இதனை சரிசெய்தால் தான் கழிவுநீர் வெளியேற முடியும். இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும்
கண்டுகொள்ளாமலேயே உள்ளனர்.
 கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக கழிவுநீர் தேங்கி சாலையில் ஓடுகிறது. தவிர வீடுகளுக்குள் கழிவுநீர் வந்துவிடுகிறது. தேங்கி கிடக்கும் தண்ணீரில் இருந்து பாம்புகள் வருகின்றன. இதனால் குழந்தைகளை வெளியே விடவே அச்சமாக உள்ளது. தவிர இரண்டு நாட்களுக்கு ஒரு முறை பாம்பாட்டிக்கு ரூ.2500 கொடுத்து பாம்புகளை பிடித்துவருகிறோம். கால்வாயை இப்பகுதியில் உள்ளவர்களே சுத்தப்படுத்தி வருகிறோம். புகார் கொடுத்தும் இதுவரை அதிகாரிகள் பார்வையிட கூட வரவில்லை. இதேநிலை தொடர்ந்தால் மக்களை திரட்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம்’’
என்றார்.

Tags : Karaikudi 16th ,
× RELATED துறையூர் நகரில் வேட்பாளர் அருண்நேரு ரோடு ஷோ