நோன்பு கஞ்சிக்காக சலுகை விலையில் அரிசி வழங்க வேண்டும் முஸ்லிம் ஐக்கிய ஜமாத் வலியுறுத்தல்

பரமக்குடி, ஏப்.10: நோன்பு கஞ்சிக்காக சலுகை விலையில் அரிசி வழங்கிட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முஸ்லிம் ஐக்கிய ஜமாத் கோரிக்கை விடுத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத் பொதுச் செயலாளர் ஜெய்னுல் ஆலம், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ‘‘ஒவ்வொரு ஆண்டும் ரமலான் மாதம் நோன்பு நோற்கும் முஸ்லீம் மக்களுக்கு நோன்பு கஞ்சி காய்ச்சிவதற்காக, சலுகை விலையில் தமிழக அரசு பச்சரிசியை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதால், இதுகுறித்து அரசின் அறிவிப்பு வெளிவருவது தாமதமாகி உள்ளது.

வருகிற ஏப்ரல் 14ம் தேதி ரமலான் மாத நோன்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நோன்பு கஞ்சி காய்ச்ச தமிழக அரசு வழங்கும் சலுகை விலை

பச்சரிசி வழங்குவதற்கான உத்தரவை உடனடியாக வெளியிட உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Stories:

>