மாநில பேட்மிண்டன் போட்டி செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதலிடம்

காரைக்குடி, ஏப்.10: மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டியில் செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் சிபிஎஸ்இ பள்ளி மாணவர் அஸ்வின்லெனின் முத்துராஜ் தமிழ்நாடு பேட்மிண்டன் அசோசியேசன் சார்பில் நடந்த மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டியில் 15 வயதுக்கு உட்பட்டோர் இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடம்பெற்றுள்ளார். இப்பள்ளி மாணவி சானியா சிக்கந்தர் 17 மற்றும் 18 வயதிற்குட்பட்ட இரட்டையர் பிரிவில் முதலிடம் பெற்றுள்ளார். இதில் தேர்வு பெற்ற மாணவர்கள் சாம்பியன் ஷிப் போட்டியில் விளையாடி அதில் தேர்வாகும்பட்சத்தில் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ளலாம்.

மாணவி சானியா சிக்கந்தர் 15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தேசிய அளவிலான போட்டியில் விளையாடியவர். தவிர 2019ம் ஆண்டு

நடந்த ஆசியா போட்டியில் இந்திய அணிக்காக பரிந்துரை செய்யப்பட்டு விளையாடி உள்ளார்.

வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளிகுழும தலைவர் குமரேசன், துணை தலைவர் அருண், நிர்வாக இயக்குநர் சாந்திகுமரேசன், முதல்வர் உஷாகுமாரி, பயிற்சியாளர் மதுரைசரவணன், பெற்றோர்கள் சிக்கந்தர், லெனின்முத்துராஜ், டாக்டர் ஆஷாலெனின் உள்பட பலர் பாராட்டினர்.

Related Stories:

>